*மாவட்ட வன அலுவலர் தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கரையோர பகுதியில் ஒருலட்சம் விதைப்பந்துகள் வீசும் நிகழ்ச்சியைமாவட்ட வன அலுவலர் இளையராஜா தொடங்கி வைத்தார்
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கரையோர பகுதியில் பனைவிதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள், மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார். விழாவில், ஸ்ரீவை டவுன் பஞ்.தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளரான எழுத்தாளர் முத்தாலங்
குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.
நதிக்கரை முருகன் கோயில் அறங்காவலர் சந்துரு, முன்னாள் பேரூராட்சி சேர்மன் கந்த சிவசுப்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட வன அலுவலர் இளையராஜா மரக்கன்று நட்டு, பனை விதைகளையும் விதைப்பந்துகளையும் மாணவ, மாணவிகளுடன் இணைந்து விதைத்து சிறப்புரையாற்றினார்.
தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவீந்திரகுமார், உதவி பொறியாளர் முரசொலிமாறன், ஸ்ரீவைகுண்டம் வட்டார பயணிகள் நலச்சங்க தலைவர் அரசன் துரைசாமி, வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி, அன்னை தாமிரபரணி ஆறு பாதுகாப்பு மக்கள் இயக்க சாமிநாதன், சித்திரைவேல், முருகன், மருதம் பவுன்டேசன் ரமேஷ், விவசாய சங்கத்தலைவர் தியாகச்செல்வன், பயணிகள் நலச்சங்க ஸ்ரீரங்கம், கிராம உதயம் மகளிர் குழுவினர்கள், பணியாளர்கள், குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள், குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி என்சிசி ஆசிரியர் மாணவர்கள், ஜோஸ் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.