ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்டோபர் மாதம் 30 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சா தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை அந்த 30 மீனவர்களையும், 4 படகுகளையும் சிறைபிடித்தனர்.
சிறைபிடித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆஜர்படுத்திய 30 மீனவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 30 மீனவர்களுக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது நீதிபதி முதல்முறையாக எல்லை தாண்டி வந்ததாக வழக்கு பதிவு செய்த 26 மீனவர்களை விடுதலை செய்தனர்.
இந்த 26 பேரும் தலா இலங்கை பணம் ரூ.2.30 லட்சம், இந்திய பணமாக ரூ.73,000 ஆயிரம் அபராதம் விதித்து விடுதலை செய்தனர். இரண்டாவது முறையாக 30 பேரும் 3-வது முறையாக 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவங்களுக்கு இலங்கை மதிப்பு ரூ.2.30 லட்சம், இந்திய மதிப்பு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த பணத்தை உடனே செலுத்தினால் 30 பேர் விடுதலை செய்யப்படுவர். அபாரதத் தொகையை கட்ட தவறும்பட்சத்தில் 6 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.
