ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/ எக்சிக்யூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/ எக்சிக்யூட்டிவ்
மொத்த காலியிடங்கள்: 4987.
சம்பளம்: ரூ.21,700- 69,100. வயது: 27க்குள்.
தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் இருப்பிட சான்று பெற்றிருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் அலுவல் ெமாழியை பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு; விண்ணப்பதாரரின் வயது வரம்பு 17.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும். வயது வரம்பில் எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டுகள், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். விதவைப் பெண்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
ஆன்லைனில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இணையதளத்தில் ெகாடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.650/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.mha.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.08.2025.