விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
மதுரை: விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவிகளின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. மாணவிகள், இளம்பெண்கள் நலன்கருதி சிறப்பு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரும் அரசுக்கு பாராட்டுகள். தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசின் கவனத்துக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுத்த தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டம் இயற்றப்பட்டது குறித்த விவரங்களை அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது