Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சீன ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜெசிகா, பவுலினி, காப், நவாரோ

பீஜீங்: சீன ஓபன் டென்னிஸ் தலைநகர் பீஜீங்கில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டைன் எம்மா நவாரோ மோதினர். இதில் 6-4, 4-6, 6-0 என்ற செட் கணக்கில் வென்று இகாவுக்கு நவாரோ அதிர்ச்சி அளித்தார். இந்த வெற்றியின் மூலம் நவாரோ காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, செக் நாட்டின் மேரி பவுஸ்கோவா மோதினார். இதில் ஜாஸ்மின் பவுலினி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3,6-7,6-1 என்று செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல், அமெரிக்காவின் கோகோ காப்-ஜெர்மனி வீராங்கனை எவ லைஸ் 4வது சுற்றில் மோதினர். இதில் 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று காப் காலிறுதிக்கு முன்னேறினார்.

* ஆண்கள் பிரிவில் சின்னர் சாம்பியன்

சீன ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர்- அமெரிக்காவின் லீனர் டீன் மோதினர். இதில் 6-2,6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஹென்றி பாட்டன், ஹரி ஹெலியோவாரா ஜோடி, 4-6,6-3,10-8 என்ற செட் கணக்கில் கரேன் கச்சனோவ், ஆண்ட்ரி ரூப்லெவ் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.