ஸ்போர்ட்ஸ் பிட்ஸ்
* உலக மல்யுத்தம் அமான் பங்கேற்பு லக்னோ: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கத்துடன் திரும்பிய ஒரே வீரரான அமான் ஷெராவத் (22), குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். லக்னோவில் நடந்த, 57 கிலோ தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமித், ராகுலை...
மகளிர் ஸ்பீட் செஸ் வைஷாலியை வென்ற அமெரிக்காவின் லீ
நியுயார்க்: ஆன்லைன் மூலம் நடைபெறும் மகளிர் ஸ்பீட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியும், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் ஆலீஸ் லீயும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஆலீஸ் லீ, 8-6 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். வரும் 11ம் தேதி நடக்கும் மற்றொரு போட்டியில், சமீபத்தில்...
24 கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜாம்பவான் ஜோகோவிச்சுக்கு என்ன ஆச்சு? சின்சினாட்டி டென்னிசில் விலகல்
சின்சினாட்டி: அமெரிக்காவில் துவங்கவுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து, செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் விலகியுள்ளார். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் (38). 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் அரை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா
லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 4 போட்டிகளின் முடிவில், 2-1...
கனடா ஓபன் டென்னிஸ் சீறிப் பாய்ந்த ஸ்வரெவ் பவ்யமாய் பம்மிய பாபிரின்
கனடா ஓபன் டென்னிஸ், ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. அதிலொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (28 வயது, 3வது ரேங்க்) 6-7 (8-10), 6-4, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியா வீரர் அலெக்சி பாபிரினை (25 வயது, 26வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் வீரராக முன்னேறினார். இந்த ஆட்டம் 2மணி 42...
மார்தாவை மடக்கிய எலெனா: அரையிறுதிக்கு முன்னேற்றம்
மான்ட்ரீல்: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, கனடா வீராங்கனை விக்டோரியா அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மான்ட்ரீல், டொரோன்டோ நகரங்களில் நடக்கின்றன. மான்ட்ரீல் நகரில் நேற்று பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் கனடாவின் இளம் வீராங்கனை விக்டோரியா...
ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் இந்திய வீரர்கள்
லண்டன்: ஓவல் மைதானத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:சச்சின்: முகமது சிராஜ் ஒரு சூப்பர் மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த வெற்றியை நினைத்தாலே எனக்கு மெய் சிலிக்கின்றது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் முடிவடைந்தாலும், இந்திய வீரர்களின் செயல்பாடு பத்துக்கு பத்து...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு இந்தியா முன்னேறியது. 28 புள்ளிகளுடன் இந்தியா 3வது இடத்திலும், 26 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. ...
ஆசிய அலைச்சறுக்கு போட்டி அலையில் சறுக்கி வீரர்கள் சாகசம்: மாமல்லபுரத்தில் நேற்று துவக்கம்
சென்னை: மாமல்லபுரத்தில் ஆசிய அலைச்சறுக்கு போட்டியின் முதல் நாளான நேற்று, அலைகளில் சறுக்கி வீரர்கள் சாகசம் புரிந்தனர். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரம்...