* இந்தியா - இங்கி. யு19 டெஸ்ட் டிரா
பெக்கென்காம்: இங்கிலாந்தின் பெக்கென்காம் நகரில் இங்கிலாந்து யு19, இந்தியா யு19 அணிகள் இடையே முதல் டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 540, இங்கிலாந்து 429 ரன் குவித்தன. 101 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, 248 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின், 350 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து, 63 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது போது ஆட்டம் டிரா செய்யப்பட்டது.
* உசைன் போல்ட் இந்தியா வருகை
கிங்ஸ்டன்: 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக சாதனை படைத்த ஜமைக்கான நாட்டு நட்சத்திர வீரர் உசைன் போல்ட், வரும் செப்டம்பர் 26 முதல் 28ம் தேதி வரை இந்தியாவில் மும்பை, டெல்லி நகரங்களில் நடக்கும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர், இதற்கு முன், 2014ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். ‘இந்தியாவுக்கு செல்ல ஆவலுடன் உள்ளேன். அதனால் அதிக உற்சாகமாக உள்ளது’ என அவர் கூறியுள்ளார்.
* தாமதமாக பந்து வீசிய இங்கி.க்கு அபராதம்
லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்ததால், இங்கிலாந்து அணிக்கு, போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், டபிள்யுடிசி புள்ளிப் பட்டியலில் அந்த அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதை, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஏற்றுக் கொண்டதால், மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை.