பெய்டைஹே: உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. சீனாவின் பெய்டைஹேயில் 73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப். 13 முதல் 21ஆம் தேதி வரை நடந்தது. டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கிய இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, ஈக்வடார், ஜெர்மனி, பராகுவே, சீனா தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.
இந்த தொடரின் முடிவில் இந்தியா 3 தங்கப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது. உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.