சிறப்பு தீவிர திருத்தம் நடந்தால் மேற்குவங்கத்தில் 1.2 கோடி வாக்காளர்கள் நீக்கப்படுவர்: ஒன்றிய அமைச்சர் பேச்சு
போங்கான்: மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கைகாட்டாவில் நடந்த விழா ஒன்றில் ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசுகையில், ‘பீகாரை போல மேற்குவங்கத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடக்கும். அப்போது மேற்குவங்கத்தில் உள்ள ரோஹிங்கியாக்கள், ஊடுருவல்காரர்கள், போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். சட்டவிரோதமாக வாக்காளர்களாக மாறிய குறைந்தது ஒரு கோடி முதல் 1.2 கோடி பேர் வரை நீக்கப்படுவார்கள்’ என்றார்.