சுற்றுலா பயணிகளுக்காக விடுமுறை நாட்களில் சிறப்பு மலை ரயில்கள் இயக்க உள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் சிறப்பு ரயிலானது, ஆகஸ்ட் 23 மற்றும் 30ஆம் தேதி, செப்டம்பர் 5 மற்றும் 7 ஆம் தேதி, அக்டோபர் 2, 4, 17 மற்றும் 19ஆம் தேதிகளில் காலை 9 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் வழியே மதியம் 2.25-க்கு உதகமண்டலத்தை அடையும். மேலும் அதே ரயில் மறுமார்க்கமாக ஆகஸ்ட் 24 மற்றும் 31ஆம் தேதி, செப்டம்பர் 6 மற்றும் 8 ஆம் தேதி, அக்டோபர் 3, 5, 18 20 ஆகிய தேதிகளில் காலை 11.25 மணிக்கு உதகமண்டலத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர் வழியே மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடையும்.
உதகமண்டலம் - குன்னூர் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23 மற்றும் 30 ஆம் தேதி, செப்டம்பர் 5 மற்றும் 7ஆம் தேதி, அக்டோபர் 2, 4, 17, 19 ஆகிய தேதிகளில் மதியம் 2.50க்கு உதகமண்டலத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 3.55க்கு குன்னூரை அடையும். அதுவே, மறுமார்க்கமாக ஆகஸ்ட் 24 மற்றும் 31ஆம் தேதி, செப்டம்பர் 6 மற்றும் 8ஆம் தேதி, அக்டோபர் 3, 5, 18, 20 ஆகிய தேதிகளில் காலை 9.20 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகமண்டலத்தை அடையும்.
மேலும், குன்னூர் - உதகமண்டலம் சிறப்பு ரயில் செப்டம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் 2,3,4, 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் காலை 8.20 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு காலை 9.40 மணிக்கு உதகமண்டலத்தை அடையும். அதுவே மறுமார்க்கமாக செப்டம்பர் 5,6,7 ஆகிய நாட்களிலும், அக்டோபர் மாதம் 2,3,4,5,18,19 ஆகிய நாட்களில் மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு குன்னூரை அடையும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.