விசேஷ தினம், சுபமுகூர்த்த நாள் எதிரொலி தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 3 நாளில் பவுனுக்கு ரூ.800 எகிறியது
சென்னை: விசேஷ தினம் மற்றும் சுபமுகூர்த்த நாள் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 3 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. கடந்த 25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் 74,440க்கும் விற்பனையானது. தொடர்ந்து 26ம் தேதிபவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,840க்கு விற்பனையானது.
நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,390க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,120க்கும் விற்றது. மூன்றாவது நாளாக நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,405க்கும், பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு பவுன் ரூ.75,240க்கும் விற்பனையானது. தொடர்ந்து 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 வரை உயர்ந்துள்ளது.