சென்னை: சுதந்திர தின விடுமுறை உள்ளிட்ட நாட்களில் 1,734 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஆக. 13, 14, 15ம் தேதிகளில் 1,320 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; கோயம்பேட்டில் இருந்து 14, 15ம் தேதிகளில் 190 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து 14, 15ம் தேதிகளில் 24 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர் சென்ற மக்கள் திரும்ப ஏதுவாக 17ம் தேதி 715 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
+
Advertisement