Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக டெல்லியை சேர்ந்த 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:1.1.2026ஐ தகுதி தேதியாக கொண்டு நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 தொடர்பாக, தமிழ்நாடு மாநிலத்திற்கான சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களாக கீழ்க்காணும் அதிகாரிகளை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

* ராமன் குமார் ஐ.ஏ.எஸ். (இணை செயலாளர், கூட்டுறவு அமைச்சகம், டெல்லி) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி

* குல்தீப் நாராயண் ஐ.ஏ.எஸ். (இணை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், டெல்லி) சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி

* நீரஜ் கர்வால ஐ.ஏ.எஸ். (மேலாண்மை இயக்குநர், இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம், டெல்லி) திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்

* விஜய் நெஹ்ரா ஐ.ஏ.எஸ். (இணை செயலாளர், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், டெல்லி) புதுக்கோட்டை, சிவ கங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள், மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு வரை நடவடிக்கைகளை முழுமையாக கண்காணிப்பர்.