Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான்: அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

சென்னை: விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துக் கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசியவர், விண்வெளியில் பயணம் செய்த முதல் நபர் யார் என்று மாணவர்களிடையே கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு மாணவர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்று சத்தமாக பதில் அளித்தனர். அந்த பதிலை கேட்ட பாஜக எம்பி அனுராதாக்கூர் சிரித்துள்ளார்.

மேலும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன் தான் நீல் ஆம்ஸ்ட்ராங் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் சோவியத் விண்வெளி வீரர் யூரி ககாரின் ஆவார், அவர் 1961ல் பூமியைச் சுற்றி வந்தார் . 1969ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்ஸ்ட்ராங், சந்திரனில் நடந்த முதல் மனிதர் ஆனார். ஆனால் இங்கே இரண்டு தவறுகள் இருந்தன. மாணவர்களுக்கு சரியான பதில் தெரியாது என்று கூறினார். மேலும் நமது பாரம்பரியம் அறிவு கலாச்சாரத்தை பாட புத்தகங்களுக்கு அப்பால் தேட வேண்டும் என்று கூறினார். நாம் இன்னும் நிகழ்காலத்தில் நம்மைப் பார்க்கிறோம்.

நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்குக் காட்டியது போலவே நாம் இருக்கிறோம். நீங்கள் உலகத்திற்கு அப்பால் இருந்து பார்த்தால், நீங்கள் பார்க்க நிறைய விஷயங்களைக் காண்பீர்கள் என்று அனுராக் தாக்கூர் மாணவர்களை வலியுறுத்தினார். இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல. பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது நீல் ஆம்ஸ்ட்ராங் என்பதை படத்தில் இருந்து நீக்கிவிடுவர். நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.