சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் பெய்யும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டும் ஜூன் மாதமே தொடங்கிவிட்டது. அதன் காரணமாக மகாராஷ்டிரா, தொடங்கி டெல்லி, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் பெரும் மழை பெய்ததுடன் சில இடங்களில் மேக வெடிப்பு, நிலச்சரிவு என பெரும்சேதங்களை சந்தித்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலக தொடங்கும் என்று நேற்று முன்தினம் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி சட்டீஸ்கர், உத்தரகாண்ட் மாநிலங்களில் நேற்று முன்தினம் முதல் விலக தொடங்கியது. தற்போது தென்னிந்திய பகுதிகளிலும் நேற்றுடன் விலக தொடங்கியுள்ளது. இரண்டொரு நாளில் முற்றிலும் விலகிவிடும்.