Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தென்மேற்கு பருவமழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெறுகிறது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவமழை கணக்கீடு இன்றுடன் நிறைவு பெறுவதாகவும், நாளை முதல் வடகிழக்கு பருவமழை மழைகால கணக்கீடு தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 1% குறைவாக பதிவாகியுள்ளது. அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கூடுதல் மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 29% கூடுதலாக பெய்துள்ளது.