புதுடெல்லி: தென்பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ மார்ச் 18ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான பெண்ணையாறு விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர்கள் அளவிலான கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய தேவையில்லை என்றும், இதில் தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து பெண்ணையாறு தொடர்பாக அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement