சியோல்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தென்கொரியா நாட்டின் ஹூண்டாய் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேட்டரியால் இயங்கும் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அந்த வளாகத்தில் புதிய கார் உற்பத்தி ஆலை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அங்கு கடந்த 6ம் தேதி அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சட்டவிரோதமாக பணியாற்றி வந்த 475 பேர் சிக்கினர். இவர்களில் 316 தென் கொரியர்கள் நேற்று நாடு திரும்பினர். இதுகுறித்து தென்கொரிய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் 330 கைதிகளை விடுவித்தனர். அவர்களில் 316 பேர் தென்கொரியர்கள். அவர்கள் தனி விமானம் மூலம் தென்கொரியா திரும்பினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement