காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையின் போது இரண்டு பழைய பயங்கரவாத மறைவிடங்களை கண்டுபிடித்து அழிக்கப்பட்டன.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையின் போது இரண்டு பழைய பயங்கரவாத மறைவிடங்களை கண்டுபிடிக்கப்பட்டது. பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அகதாபாத் மற்றும் நெக்ரிபோரா இடையேயான அடர்ந்த காடுகளில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பழைய மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டன. இந்த மறைவிடங்களிலிருந்து எரிவாயு சிலிண்டர்கள், ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் உட்பட சில அத்தியாவசிய பொருட்கள் மீட்கப்பட்டன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்போது, மீட்கப்பட்ட பொருட்கள், எந்த அமைப்பு இந்த மறைவிடங்களைப் பயன்படுத்தியது எனவும் சமீபத்தில் அங்கு பயங்கரவாதிகள் தங்கியிருந்தார்களா என்பதைக் கண்டறியவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, சுற்றியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
