சென்னை: தென்மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப்புக்கான தமிழக அணி தேர்வு போட்டி வருகிற 21 முதல் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் இன்று முதல் (08.11.2025) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் செயலாளர் டி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: 36வது தென்மண்டல நீச்சல் சாம்பியன்ஷிப் 2025 ஹைதராபாதில் கச்சிபவுலியில் உள்ள ஜி.எம்.சி. பாலயோகி ஸ்டேடியத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.பல்வேறு வயதுப்பிரிவினருக்கான இந்த போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குள வளாகத்தில் இம்மாதம் (நவம்பர்) 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. நீச்சல், வாட்டர்போலோ மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளுக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவர். இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் கிளப்புகள் www.tnsaa.in/club என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் 8ம் தேதி முதல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.தனிநபராக பங்கேற்க விரும்புவோர் admin@tnsaa.in என்ற ஈமெயில் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க 13ம் தேதி கடைசி நாளாகும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement

