காத்மாண்டு: தெற்கு நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎன்-யுஎம்எல்) மற்றும் ஜென் ஜி இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பாரா மாவட்டம், சிமாரா சவுக் என்ற இடத்தில் ஜென் ஜி இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கலைந்து செல்லுமாறு அவர்களிடம் போலீசார் கூறினர். ஆனால் இளைஞர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 6 போலீசார், 4 இளைஞர்கள் காயமடைந்தனர்.
+
Advertisement


