பெங்களூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி, 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 2ம் நாளான நேற்று தென் ஆப்ரிக்கா 221 ரன்னுக்கு சுருண்டது. அதன் பின் இந்திய அணி 2ம் இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் ரன் எடுக்காமல் எல்பிடபிள்யு ஆனார். சாய் சுதர்சன் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 24 ஓவரில் 3 விக்கெட் இழந்து 78 ரன் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 26, குல்தீப் யாதவ் ரன் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா 112 ரன் முன்னிலை பெற்ற நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் தொடர்கிறது.
+
Advertisement

