புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாடு மற்றும் ஐபிஎஸ்ஏ உச்சி மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்காவுக்கு சென்றார். ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உலகளாவிய விதிமுறைகள் தேவை என வலியுறுத்தினார். இந்த மாநாட்டின் இடையே இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங், பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் தென் ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோஸா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அவர் டெல்லி திரும்பினார். தென் ஆப்ரிக்காவில் உலக தலைவர்களுடனான சந்திப்பு இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் என மோடி தனது எக்ஸ் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
+
Advertisement



