Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்தரப்பு டி20: தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய நியுசிலாந்து

ஹராரே: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா - நியுசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா வீரர்கள் சொதப்பியதால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 20 ஓவர் முடிவில், அந்த அணி 8 விக்கெட் இழந்து 134 ரன் எடுத்தது.

பின், எளிய இலக்குடன் களமிறங்கிய நியுசிலாந்து துவக்க வீரர்கள் டெவான் கான்வே (19 ரன்), டிம் செஃபெர்ட் (ஆட்டமிழக்காமல் 66 ரன்), முதல் விக்கெட்டுக்கு 51 ரன் எடுத்தனர். 15.5 ஓவரில் நியுசி, 3 விக்கெட் மட்டுமே இழந்து 135 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செஃபெர்ட் ஆட்ட நாயகன்.