திருவண்ணாமலை: சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதையடுத்து தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி அணியில் இருந்து விநாடிக்கு 2,100 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், 119 அடி நீர்மட்டம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 114 அடியை இன்று எட்டவுள்ளது.
+
Advertisement