தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
டெல்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுவடையும். தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் வலுவடையக் கூடும்.


