தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு..!!
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக குயின்டன் டி காக் 106, பவுமா 48 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் பிரஷித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


