Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தென் ஆப்ரிக்காவுடன் 2வது டி20 தெறிக்க விடுமா இந்தியா?

முல்லன்பூர்: இந்தியா - தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, முல்லன்பூரில் இன்று நடக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி முடித்துள்ள நிலையில், தற்போது 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதல் டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

அதனால், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், சண்டிகரில் உள்ள முல்லன்பூரில் இன்று 2வது டி20 போட்டி நடக்கவுள்ளது. முதல் டி20யில், இந்திய துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வீழ்ந்து பெரியளவில் ஏமாற்றம் தந்தனர். இருப்பினும், பேட்டிங்கில் ஒற்றை ஆளாக தனித்து நின்று ஹர்திக் பாண்ட்யா சாகசம் புரிந்தார்.

சூர்யகுமாரும், கில்லும், டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவதால் சிறப்பாக ஆடி தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் அவர்கள் உள்ளனர். இன்றைய போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர்களும், சூர்யகுமார் யாதவும், தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு அதிரடி வேட்டையில் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் லைனில் கடைசி வரை அடித்து ஆடக்கூடிய வீரர்களின் தேவை இருப்பதால், இன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் சேர்க்கப்படவில்லை. முதல் போட்டியில் மோசமாக ஆடிய தென் ஆப்ரிக்கா, இன்றைய போட்டியில் பேட்டிங் ஃபார்முக்கு திரும்ப முனைப்பு காட்டும்.

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, ஜிதேஷ் சர்மா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, சஞ்சு சாம்சன்.

தென் ஆப்ரிக்கா: அய்டன் மார்க்ரம் (கேப்டன்), குவின்டன் டிகாக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் புரூவிஸ், டேவிட் மில்லர், டோனோவன் பெரேரா, மார்கோ யான்சன், கேஷவ் மகராஜ், லூதோ சிபம்லா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி நிகிடி, ஜார்ஜ் லிண்டே, குவேனா மபகா, ரீஸா ஹென்ட்ரிக்ஸ், கோர்பின் பாஷ், டோனி டி ஜோர்ஸி, ஓட்நீல் பார்டமேன்.