புதுடெல்லி: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விகாஸ் திவாரி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சோனியா காந்தியின் பெயர் கடந்த 1980ம் ஆண்டு புதுடெல்லி தொகுதியின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் 1983ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் இந்திய குடிமகனாக ஆனார். இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை பரிசீலனை செய்த பின்னர் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். மேற்கண்ட வழக்கில் டெல்லி நீதிமன்ற நீதிபதி வைபவ் சவுராசியா நேற்று பிறப்பித்த உத்தரவில், “ சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனுவை நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
+
Advertisement