Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மகனை ஐஎஸ் இயக்கத்தில் சேர்க்க முயற்சி தாய், 2வது கணவர் உபா சட்டத்தில் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்த 39 வயதான ஒரு பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகன் உண்டு. இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இவர் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அதன் பின்னர் இவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினார்.

இந்நிலையில் சிறுவனை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க திட்டமிட்டனர். அந்த சிறுவனை இவர்கள் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஒரு மத பாடசாலையில் சேர்த்தனர். இந்நிலையில் இந்த சிறுவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தாயின் உறவினர்கள் திருவனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். இதில் தாயும், அவரது இரண்டாவது கணவரும் சேர்ந்து அந்த சிறுவனை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.