Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோலையார் அணை பூங்கா விரைவில் திறக்கப்பட வேண்டும்

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வால்பாறை : பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் கீழ் 8 அணைக்கட்டுகள் உள்ளன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் அணைகளான சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை ஆகிய 3 அணைகள் வால்பாறை மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த அணைகளின் பராமரிப்பு பணிகள் ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஆணையத்தின் மூலம் உலக வங்கியின் நிதி உதவியுடன் முதற்கட்டமாக கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி 18 மாதங்கள் கழித்து முடிவுற்றது. இதில் சோலையார் அணை ரூ.16 கோடி மதிப்பிலும், நீரார் அணை ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பிலும், சின்னக்கல்லார் அணை ரூ.2 கோடியே 51 லட்சம் மதிப்பிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் 2ம் கட்டமாக தமிழகத்தில் அணைகள் புனரமைப்பு செய்ய ரூ.610 கோடி மதிப்பில் உலக வங்கி கடனுதவி மூலம் தமிழகத்தில் உள்ள 36 அணைகளை புனரமைக்க திட்டமிடப்பட்டு சோலையார் அணை 2020 ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டுகள் பணி நடைபெற்று அணை புது பொலிவு பெற்றது.

தொடர்ந்து 3ம் கட்டமாக அணையின் ஷட்டர் பழுது நீக்கப்பட்டு, அணைக்கட்டு முன்பு பூங்கா மேம்பாடு, அலுவலக மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவுற்றது. இந்நிலையில் பூங்கா பகுதி விரைவில் திறக்கப்படும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் அணைக்கு முன் கேபிள் கார் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது உள்ளது.