அண்ணாநகர்: கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (55). இவர், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊரான பெங்களூருவுக்கு பஸ்சில் புறப்பட்டார். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த டிப்டாப் ஆசாமி, நைசாக பேச்சு கொடுத்தபடி வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் கொடுத்த குளிர்பானத்தை ஜெயராமனுக்கு கொடுத்துள்ளார்.
அதை குடித்த உடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த செயின், மோதிரம் உள்பட 12 சவரன் நகை மற்றும் விலை உயர்ந்த செல்போன் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பயணியும் மாயமானார். இதுபற்றி கோயம்பேடு போலீசில் ஜெயராமன் புகார் செய்தார். அதன்பேரில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.