சென்னை: சமூக ஊடகப் பக்கங்களின் முகப்புப் படத்தில் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளார். தி.மு.க சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரை இயக்கத்தை கடந்த ஜூலை மாதம் தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்தில் ஒரு கோடி குடும்பங்கள் திமுகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அண்ணாவின் 117வது பிறந்த நாளை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000க்கும் அதிமான வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் திமுகவில் இணைந்துள்ள உறுப்பினர்களை ஒன்று திரட்டி, ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதி மொழி ஏற்றிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அண்ணாவின் பிறந்த நாளையடுத்து கடந்த 15ம் தேதி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் திமுகவில் இணைந்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டை தலைகுனிய விடமோட்டோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிலையில் சமூக ஊடகப் பக்கங்களில் முகப்புப் படத்தில் ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றியுள்ளார்.
+
Advertisement