நாகப்பட்டினம்: நாகை அருகே கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர்கள், விவசாயிகள் கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய 112 நேரடி கொள்முதல் நிலையங்களில் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், சிந்தாமணி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து கோவில் 10 தானிய கடங்கிற்கு வழக்கம் போல் சுமார் 490 நெல்மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி சென்றது.
திடீர் என சடையன் கோட்டகம் அருகே லாரி சென்றபோது இருசக்கர வாகனம் எதிரே வந்ததால், இருச்சக்கரம் வாகனம் ஓட்டிட்டு வந்தவர்கள் மேல மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருக்கக்கூடிய குளத்தில் லாரி நெல்மூட்டைகளோடு பாய்ந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கு. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் கூட இருந்த உதவியாளரும் அதிர்ஷவசமாக உயிர் தப்பி இருந்தாலும், சுமார் 400க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் முழுவதும் குளத்தில் விழுந்து முழுவதுமாக நனைந்து இருக்கிறது.
அங்க இருந்த பொதுமக்கள் மற்றும் அங்கு இருந்த கூலி விவசாயிகள் அனைவரும் சேர்ந்து லாரியில் இருக்கக்கூடிய நெல் மூட்டைகளை மாற்ற ஒரு லாரிக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்கள். தொடர்ச்சியாக இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த ஈரமான நெல்மூட்டைகளை மீண்டும் அந்த கிடங்குக்கு கொண்டு செல்லக்கூடிய பணியிலும் அங்கு இருக்கக்கூடிய ஊழியர்கள் நேரடி கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்த சுமைதூக்கும் தொழிலாளர்களும் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.
