Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் இருந்து கடத்திய ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம் : தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற ரூ.2 கோடி மதிப்பிலான கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தமிழக கடல் வழியாக இலங்கைக்கு தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவதால், இலங்கை கடற்படையினர் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் மாவட்டம் ஆழியவளை கடற்கரையில் வழக்கமான ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த இரண்டு சாக்கு பைகளை சோதனை செய்தனர்.

அதில் 30 பார்சலில் இருந்த 103 கிலோ கேரள மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்ட கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். கடத்தல்காரர்கள் குறித்த விசாரிக்க கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மரதன்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கேரளா கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடியாகும்.