முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வி சான்றிதழை வழங்க கோரிய ஆணையை ரத்து செய்தது டெல்லி ஐகோர்ட்..!!
டெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் கல்வி சான்றிதழை வழங்க கோரிய ஆணை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1991 மற்றும் 1993ல் முடித்த 10, 12ம் வகுப்பு கல்விச் சான்றிதழை தர சிபிஎஸ்சிக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டது. சிபிஎஸ்சிக்கு ஆணையிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி ஐகோர்ட் ரத்து செய்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி சான்றிதழை தர சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டிருந்த ஆணை ரத்து செய்யப்பட்டது.