மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து பாரீஸ் புறப்பட்ட விமானத்தின் உள்ளே புகை மூண்டதால் பயணிகள் பீதி அடைந்தனர். விமானத்துக்குள் புகை சூழ்ந்ததை அடுத்து பயணிகள் அனைவரும் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து சுவாசித்தனர். விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதியதால் விமானத்தில் ஓட்டை விழுந்ததுடன் புகை எழுந்தது. புகை சூழ்ந்ததை அடுத்து மீண்டும் மாட்ரிக் திரும்பிய விமானத்தில் இருந்து பயணிகள் கீழே இறக்கப்பட்டனர்
+
Advertisement