ஸ்மார்ட்ஃபோன் ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் துண்டு: தேசிய இணையக் குற்றப் புகார்களுக்கான இணையதளத்தில் புகார்
பெங்களூர்: பெங்களூரில் ஆன்லைனில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு டைல்ஸ் துண்டு அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரில் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரேமானன் அமேசானில் ரூ.1.87 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை முழு தொகையையும் செலுத்தி ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்த பார்சலில் ஸ்மார்ட் போன் பதிலாக ஒரு டைல்ஸ் துண்டு மட்டுமே இருந்தது என்று அதிர்ச்சி அடைந்தார்.
இந்த மோசடி குறித்து அவர் தேசிய இணையக் குற்றப் புகார்களுக்கான இணையதளத்தில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமேசான் நிறுவனம் பிரேமானுக்கு மொத்த தொகையையும் திருப்பி அளித்துவிட்டது.
 
  
  
  
   
