* மோர் குழம்பு இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்.
* கொண்டைக்கடலை சுண்டல் தாளிக்கும் போது இரண்டு கேரட் துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.
* ரொட்டியில் தயாரிக்கப்படும் உப்புமாவில் உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கிச் சேருங்கள். சுவையாக இருக்கும்.
* காய்ந்த மிளகாய் காம்புகள் சில வற்றை தோசை மாவில் போட்டு வைத்தால் மாவு விரைவில் புளித்து விடும்.
* பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய் தூளையும், புளியையும் சேர்த்து பாத்திரத்தை தேய்த்தால் மீன் வாடை போய்விடும்.
* துவரம்பருப்பை வேகவைக்கும் போது அதனோடு தேங்காய் துண்டு ஒன்றைப் போட்டால் விரைவில் வேகும்.
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை டிரேயில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்தால் மிக விரைவில் ஐஸ் கட்டியாக மாறும்.
* சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது சிறிதளவு கடலை மாவையும் கலந்தால் சுவையாகவும், மொர மொரப்பாகவும் இருக்கும்.
* பச்சைமிளகாய் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும்.
* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.
* வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும் போது சிறிது வெல்லம் தட்டிப் போட்டு இறக்கினால் நெய் கூடுதல் மணத்துடன் இருக்கும்.
* கேக் மாவுடன் கொஞ்சம் ஆரஞ்சு சாறு சேர்த்தால் கேக் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
- விமலா சடையப்பன்