Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

*அழுக்குப் படிந்த பல்புகளை நீர் விட்டுக் கழுவக் கூடாது. ஈரத்துணியினால் கண்ணாடிப் பகுதியை மட்டும் துடைக்க வேண்டும். உலோகப் பகுதியில் ஈரம் பட்டால் பல்ப் ஃபியூஸாகும்.

* முட்டை, இறைச்சியை வேக விடும் போது அடுப்பு அதிகம் எரியக் கூடாது. இறைச்சி வெந்து மிருதுவாவதற்குப் பதிலாக விரைத்து விடும்.

* முட்டைக் கறை படிந்த பொருளை வெந்நீரில் கழுவாதீர்கள். அவ்வாறு செய்தால் மேலும் கறை ஒட்டிக் கொள்ளும். எனவே, குளிர்ந்த நீரில்தான் கழுவ வேண்டும்.

* பச்சைக் கொத்தமல்லி, கறிவேப்பிலையை எண்ணெயில் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் அதிலுள்ள சத்துகளும், வாசனையும் அழியாமல் இருக்கும்.

* கிழங்குகளை சமைக்கும்போது அதிகம் எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

* சீஸ் வைக்க வீட்டில் ஃபிரிட்ஜ் இல்லையா, வினிகர் கலந்த நீரில் நனைத்த துணியில் சீஸை சுற்றி வைக்கவும்.

* அலுமினிய பாத்திரங்களில் பழுப்பு நிறக் கறை படிந்தால், உப்புக் காகிதத்தால் தேய்த்துக் கழுவுங்கள். கறை நீங்கி பாத்திரம் பளிச்சிடும்.

* தரையில் எண்ணெய் கொட்டி விட்டதா? கடலை மாவை நீரில் குழைத்து கறை மீது பூசி, கொஞ்ச நேரமானதும் தண்ணீர் விட்டுக் கழுவினால் போதும்.

* சலவைக்கல், டைல்ஸ் பதித்த சுவர், தரை இடுக்கில் படிந்த அழுக்குகளை போக்க எலுமிச்சையை நறுக்கி தேய்த்து 15 நமிடம் ஊறிய பிறகு துணியால் துடைத்தால் சுத்தமாகும்.

* காபி ஃபில்டர் துவாரங்கள் அடைத்துக் கொண்டால் ஃபில்டரை சிறிது நேரம் அனல் மீது காட்டினால் அடைத்துக் கொண்டிருக்கும் பொருள் எரிந்து சாம்பாலாகி உதிர்ந்து விடும்.

* வெள்ளரிக்காய் தோல்களை சீவி எறும்புகள் உள்ள இடத்தில் போட்டு வைத்தால் எறும்புகள் தெறித்து ஓடும்.

* ஃபிரிசரில் ஐஸ் டிரேக்கு அடியில் ஒரு பிளாஸ்டிக் விரிப்பைப் போட்டு வைத்தால் டிரேயை எடுப்பது எளிதாக இருக்கும்.

- மல்லிகா அன்பழகன்.