* பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சுடு தண்ணீரை ஊற்றினால் சரியாகிவிடும்.
* வேகவைத்த பலாக் கொட்டைகளை தோல் நீக்கிய பின், உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது வோல் உப்பு, காரம் சேர்த்து செய்தால் சூப்பர்.
* பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில் போட்டு பொரித்து எடுத்தால் நன்றாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோலை அகற்றி வட்டவடிவமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் சுவையாக இருக்கும்.
* சாம்பார், கீரை, புளிப்புக் கூட்டு போன்றவற்றை முடிந்து இறக்கும் சமயம் வெந்தயப் பொடி தூவினால் சுவையும், மணமும் சுவையாகஇருக்கும்.
* புதினா ஜீரண சக்தியும், ரத்த சக்தியும் பெற வல்லது. புதினா இலைகளை முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.
* எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு கரண்டி மோர்விட்டு கலக்கிய பின் தேய்த்தால் பிசுக்கு நொடியில் போய்விடும்.
* பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துப் பிசைந்தால் பூரி சுவையாக இருக்கும்.
* உருளைக்கிழங்கை வாங்கும்போது அதன் மேல்பகுதி பச்சையாக இருந்தால் அதனை வாங்க வேண்டாம்.
* கேரட், பீட்ரூட் வாடிப்போனால் அதனை உப்புக் கலந்த நீரில் ½ மணி நேரம் போட்டு வைத்தால் புதியது போல் ஆகிவிடும்.
* சூப் தயாரிக்கும்போது அதில் இரண்டு ஸ்பூன் பார்லி நீர் கலந்து குடித்தால் உடல் பலம் பெறும்.
* எள்ளடை மாவில் பூண்டு உரித்து நசுக்கிப்போட்டு கலந்து எள்ளடை சுட்டால் மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.
- விமலா சடையப்பன்