Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

* வெங்காயம் நறுக்கும்போது கண் கலங்காமல் இருக்க வெங்காயத்தை 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* சமையல் பாத்திரங்களில் எண்ணெய் ஒட்டியிருப்பதை நீக்க சூடான தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்து கழுவவும்.

* மிளகாய்த்தூள் புதிதாக இருக்க சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.

* விளக்குகள் விளக்கும் பீதாம்பரி கொண்டு அடுப்பை துடைத்தால் பளிச்சென மின்னும்.

* கீரை பச்சையாக இருக்கஅதை கழுவி ஒரு துணியில் துடைத்து, காகிதத்தில் மடித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* உப்புக் கிண்ணத்தில் ஈரப்பதம் வராமல் அதில் சில அரிசிதானியங்கள் போடவும்.

* சமையலறையில் எறும்புகள் வராமல் சிறிது சுண்ணாம்பு தூள் அல்லது சோடா தூள் மூலையில் வைக்கவும்.

* காபி பொடி வாசனை மாறாமல் இருக்க ஏர்டைட் டப்பாவில் சிறிது சர்க்கரை சேர்த்து வைக்கலாம்.

* அடி பிடித்த பாத்திரம் அதில் பேக்கிங் சோடா தூவி தண்ணீர் சேர்த்து கொதிக்க விட சுத்தமாகும்.

* மிளகாய்த் தூள் கைகளில் ஒட்டியிருப்பதை நீக்க சிறிது எண்ணெய் தடவி கழுவவும்.

* காய்கறிகள் நன்கு பசுமையாக இருக்க சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு நிமிடம் மூழ்கவைத்து பிறகு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

* மீன் வாசனை நீக்க கையில் எலுமிச்சைச் சாறு தடவி கழுவவும்.

* சமையல் அறையில் நல்ல வாசனை வர சிறிது வெனிலா எசென்ஸ் தண்ணீரில் சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும்.

* பட்டாணி விரைவாக வேகவைக்க சிறிது சோடா சேர்த்து வேகவைக்கவும்.

* பொறிகடலையுடன் வெங்காயம் வதக்கி சேர்த்து அரைத்து வைக்க தேங்காய் இல்லாத தண்ணி சட்னி ரெடி.