Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

* காய்ந்த மிளகாய் காம்புகளை தோசை மாவில் போட்டு வைத்தால் மாவு சீக்கிரம் புளித்து விடும்.

* மோர் குழம்பு செய்து இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி.

* ரொட்டியில் தயாரிக்கப்படும் உப்புமாவில் உருளைக்கிழங்கை சிறிதாக நறுக்கி சேர்த்தால் சுவை நன்றாக இருக்கும்.

* மூக்குக்கடலை சுண்டல் தாளிக்கும்போது இரண்டு கேரட்டை துருவி வெங்காயத்துடன் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.

*அரிசி உப்புமா செய்யும்போது அரிசி ரவையில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பிசிறி வைத்த பிறகு செய்தால் உப்புமா பொல… பொல வென இருக்கும்.

* சப்பாத்தியில் சில இஞ்சித் துண்டுகளை போட்டு வைத்தால் நீண்டநேரம் மிருதுவாக இருக்கும்.

* பஜ்ஜி செய்யும்போது கடலைமாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதாமாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே தனி.

* பிரியாணி இலைகளை சமையல் அறை சிங்கில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

* ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி கத்தி, அரிவாள் மணையில் தடவினால் துரு காணாமல் போய் விடும்.

* எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதில் அரை ஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்தால் சூப்பின் சுவை சூப்பராக இருக்கும்.

- விமலா சடையப்பன்.