* கத்தரிக்காயை சமையலுக்கு உபயோகிக்கும் போது, அதன் காம்பை மட்டும் தான் நீக்க வேண்டும். மேல் புற கிரீடத்தை நீக்கக்கூடாது.
* அலமாரி தட்டுக்களில் வேப்பம் இலையை கொஞ்சம் தூவி அதன்பின் பொருட்களை வைத்தால் பூச்சிகள் வராது.
* வாழைக்காய் சமையலில் சேரும்போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் வாயு தெரியாது.
* புளியை பானையில் போட்டு அதன் மேல் கொஞ்சம் கல் உப்பை தூவி வைத்தால் புளி கெடாமல், காய்ந்து போகாமல் இருக்கும்.
* கோதுமை மாவைக் கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கலந்து உடனே தோசை வார்க்கலாம்.
* எந்த சுண்டல் செய்தாலும் பீட்ரூட், கேரட்டைத் துருவி கலந்து செய்தால் சூப்பராக இருக்கும்.
* உளுந்தம் பருப்பை வடைக்கு ஊறவைக்கும்போது, ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதிக நேரம் ஊறவைத்தால் நிறைய எண்ணெய் குடிக்கும்.
* ரவையை வறுத்து வைக்கும்போது சிறிது உப்புத் தூள் சேர்த்து வறுத்தால் நீண்ட நாட்கள் புழுக்கள் வராது.
* உருளைக்கிழங்கை வேகவைக்க, தண்ணீருடன் சிறிது கடுகு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.
* கேக் கலவையில் அரை கப் ஆரஞ்சுச் சாறு சேர்த்தால் கேக் அதிக மென்மைத் தன்மை தரும்.
* பூண்டை லேசான சுடுநீரில் சிறிது நேரம் போட்டு விட்டு பின்பு உரித்தால் தோல் எளிதாக உரியும்.
- விமலா சடையப்பன்.