Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறட்டைக்குத் தீர்வு!

யாருக்குமே பிடிக்காத சத்தம் குறட்டை. குறட்டையை தவிர்க்க சில யோசனைகள் பின்பற்றினால் பிரச்னைகள் குறையும்.

* தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

* மல்லாந்து படுப்பதும் குறட்டைக்கு காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து தூங்கினால் குறட்டை வராது,

* வழக்கமாக படுக்கும் ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கலாம்.

* தலை பக்கம் கூடுதல் தலையாணைகள் (உயரமாக) வைத்து படுத்தால் குறட்டை குறையும்.

* தொடர்ந்து குறட்டை விட்டால் டாக்டரை பார்க்கலாம்.

* குறட்டை மூச்சு அடைப்பிலும் கொண்டு போய் விடலாம்.

* குறட்டையால் இதயத்துடிப்பு தாறுமாறாக இயங்கலாம்.

* குறட்டையால் தலைவலி, உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.

* பல் செட்டுடன் தூங்கினால் குறட்டை வரும். எனவே அதனை கழட்டி வைத்துவிட்டு தூங்குவது நன்மை தரும்.

* உடல் பருமன் குறைந்தால் குறட்டையும் படிப்படியாக குறையும்.

* ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இவை குறட்டைக்கு நல்ல தீர்வு கொடுக்கும்.

* எப்போதும் மூக்கின் வழியாக மூச்சு விடப் பழகவும், மூச்சுப் பயிற்சிகள் நிறைய எடுத்துக்கொள்ளவும் பலன் கிடைக்கும்.

* சைனஸ் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி, ஆரம்பத்திலேயே குறட்டையை சரி செய்யலாம்.

* அதிகம் சாப்பிட்டுத் தூங்கும் பழக்கத்தை கைவிடவும்.

- விமலா சடையப்பன்