ஸ்கோடா நிறுவனம், புதிய ஆக்டாவியா ஆர்எஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார் வரும் நவம்பர் மாதம் அறிமுகமாகும் என நிறுவனத் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4ம் தலைமுறை காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெறும். இது அதிகபட்சமாக 265 எச்பி பவரையம், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 100 கிலோ மீட்டர் வேகத்தை 6.4 நொடிகளில் டெ்டும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும்.
தோற்றத்தை பொறுத்தவரை, கருப்பு நிற ரேடியேட்டர் கிரில், புதிய வடிவமைப்புடன் கூடிய வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லாம்ப், எல்இடி டிஆர்எல்கள் இடம் பெறும். உள்புறம் சிவப்பு நிற கோடுடன் கூடிய இன்டீரியர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்பட பல அம்சங்கள் இடம் பெறும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.