ஸ்கோடா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட குஷக் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதன்படி, இந்த காரில் பனோரமிக் சன்ரூப் இடம் பெற்றுள்ளது. எல்இடி டிஆர்எல்கள், கருப்பு நிற அலாய் வீல்கள், மெலிதான டெயில் லாம்ப்கள் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த காரில் 115 எச்பி பவரை வெளிப்படுத்தக் கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 150 எச்பி வெளிப்படுத்தக் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

