*கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமை தொடங்கி வைத்து, கலெக்டர் தர்ப்பகராஜ் பேசியதாவது:
தொழிலாளர்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. தொழிலாளர்களின் திறனை மேம்படுத்துதன் மூலம் அவர்களுடைய பொருளாதாரம் மேம்படும்.
எனவே, அரசு வழங்கும் தொழில் மேம்பாட்டு திறன் பயிற்சியை முறையாக தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கட்டுமான தொழிலில் நீண்ட காலம் பணியாற்றினாலும், இதுபோன்ற தொழில்நுட்ப திறன்களை தெரிந்துகொள்வதன் மூலம், வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய திறமை தனித்துவம் பெறும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பொன்.தனசேகரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
8. மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 55 கோரிக்கை மனுக்களை பெற்று ஆர்டிஓ விசாரணை
ஆரணி : ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சிவா தலைமையில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஆர்டிஓ சிவா பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர்.அப்போது, ஆரணி வருவாய் கோட்டத்தில் 4 தாலுகாவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.
தொடர்ந்து, கூட்டத்தில், பட்டா தொடர்பான மனுக்கள், பட்டா ரத்து, நில அளவை, கணினி திருத்தம், பரப்பு திருத்தம், ஆக்கிரமிப்பு அகற்றம், தாயுமானவர் திட்டத்தில் பெயர் சேர்க்ககோரி, நேரடி நெல்கொள்முதல் நிலையம், பாலம் அமைத்துதரகோர என 55 கோரிக்கை மனுக்களை ஆர்டிஓ சிவா பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.