Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகங்கையில் இரு அரசுப் பேருந்துகள் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு!!

டெல்லி : சிவகங்கையில் இரண்டு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், 11 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " தமிழகத்தின் சிவகங்கையில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்". இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே 2 அரசுப் பேருந்​துகள் நேருக்கு நேர் மோதி​ய​தில் 9 பெண்​கள் உட்பட 11 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 40 பேர் பலத்த காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்​பாக நாச்​சி​யாபுரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர். திண்​டுக்​கல் நோக்​கிச் சென்ற அரசுப் பேருந்து அதிவேக​மாக சென்​ற​தாக​வும், மேட்​டுப்​பாளை​யத்​திலிருந்து வந்த பேருந்​தின் ஓட்​டுநர் தூக்க கலக்​கத்​தில் இருந்​த​தாக​வும், அதனால்​தான் விபத்து ஏற்​பட்​ட​தாக​வும் பயணி​கள் தெரி​வித்​தனர். ஏற்கனவே விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, தலா 3 லட்சம்; பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம்; லேசான காயமடைந்து, சிகிச்சை பெறுவோருக்கு, தலா 50 ஆயிரம் ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.