சிவகங்கை காளையார்கோவிலில் ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கு: ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: சிவகங்கை காளையார்கோவிலில் ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கில் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜகோபால கிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தினேஷ்குமார் என்ற குற்றவாளி சிக்காததால் அப்பாவியான மனுதாரர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


